சமூகச் செய்திகள்
யாழில் திடீர் பணக்காரர்கள் 18 பேர் பொலிஸ் விசாரணையில்
யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான சொத்துக்களைக் குவித்து திடீர் பணக்காரர்களாக மாறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல், மீட்டர் வட்டி மற்றும் கப்பம் பெறுதல் உள்ளி...
யாழ் விரிவுரையாளர் தயாளினி கொலை வழக்கு ; மகள், மருமகன் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சித்த மருத்துவப் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம...
ஒரே வீட்டில் இரு மரணங்கள் ; காரணம் என்ன? தீவிர விசாரணையில் பொலிஸார்
கண்டி மாவட்டம், புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரைத் திருமணம் செய்யவிருந்த ஆண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ...
பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பண மோசடி? ; 43 மடிக்கணினிகள் மீட்பு
இணையம் மற்றும் தொலைபேசி ஊடாகப் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, பல்வேறு வழிகளில் ஏமாற்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படும் பாரிய சேவை மையம் ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோசடிகளுக்குப் பயன...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (Protection of the State Terrorism Act – PSTA) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று (04) மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க, எவரிவத்தை நகரில் போராட்டமொன்ற...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து விசேட பேருந்து சேவைகள்
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையும் (SLTB) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC) இணைந்து விசேட பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளன. இம்முறை தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்...
துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு திகதியிடப்பட்டது
அண்மையில் வீட்டுத் தொகுதியொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக எதிர்வரும் 23ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்...
ஆழ்கடலில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைப்பு
இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த பலநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விச...
ஓடும் பேருந்தில் பயணி உதைத்ததில் பெண் நடத்துனர் மரணம்
தெலுங்கானாவில் பெண் நடத்துனரை பெண் பயணி எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சமீப காலமாகவே அரசின் பேருந்து துறைகளில் பெண்கள் ஏராளமான பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக நிறைய பெண் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் வந்து விட்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அரசு பேருந்து ...
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை ; பிரதான சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் 'படுவத்தே சமர' என்பவரை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (04) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கடந்த மே மாதம் 10ஆம் ...
யாழில் அரசியல்வாதி ஒருவரின் மகன்கள் அதிரடி கைது ; நிறைமாத கர்ப்பிணிப் பசுவிற்கு நடத்தப்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் நிறைமாத கர்ப்பிணிப் பசு உட்பட இரண்டு பசுக்கள் சட்டவிரோதமாக இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரின் இரண்டு மகன்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை புங்கு...
தனியார் தொலைக்காட்சி மாநாட்டுக்கு ரூ.10 கோடி ; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்தும் மாநாடு ஒன்றுக்கு வழங்கியமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
விமல் வீரவன்சவுக்கு எதிரான விசாரணை 25ஆம் திகதி
அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சட்டபூர்வமான வருமானத்தை விட அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ...
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின் ரயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 05.10 மணிக்குச் ...
கைதான வருணி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்
கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், அதன் தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த விதம் குறித்து உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...