இலங்கை
காட்டுப் பாதையூடாக பாடசாலை சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த துயரம் ; நால்வர் வைத்தியசாலையில்
டயகம – அக்கரபத்தனை, கிளாஸ்கோ தமிழ் பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்காகி டயகம பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகள் காட்டுப் பாதையூடாக பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் ப...
தமிழர் பகுதியொன்றில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் ; விசாரணைகள் தீவிரம்
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) குறித்த பகு...
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள்
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவிக்கையில், அன்றைய தினம் வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத...
சிங்கராஜ வனப்பகுதியில் சீனப் பிரஜைகள் செய்த சம்பவம் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்தில் உயிரியல் வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தம் 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு பேரும் சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு வாழும் அரிய வகை உயிரி...
தமிழர் பகுதியில் இப்படியும் சம்பவம் ;காதலனுக்காக தாயின் தாலி கொடியை திருடி மகள் ஆடிய நாடகம்!
மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காக தனது தாயின் 8½ பவுன் தாலிக்கொடியைத் திருடி, அதனை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொடுத்த 22 வயதுடைய யுவதியை இன்று (23) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த யுவதி தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருவதுடன், தாலிக்கொடி திருட்டுச் சம்பவம் தொடர்பில் உறவினரா...
பொரளை அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து
பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது உள்ளே சிக்கியிருந்த வெளி...
பாடசாலை மாணவர்களுக்கான பாதணி தொடர்பில் கல்வியமைச்சின் முக்கியஅறிவிப்பு
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா துறவற மாணவர்களுக்கு 2027 ஆம் ஆண்டிற்காக காலணிகள் வழங்குவதற்கான விநியோகஸ்தர்களின் பதிவு 2026.11.03 முதல் 2026.12.20 வரை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்படும் வவுச்சர்கள் 2026.11.10 முதல்...
தேசிய முதன்மை பணவீக்கம் 8.5 ஆக அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.5 ஆக அதிகரித்துள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.1 ஆக காணப்பட்ட நிலையில், ஒக்டோபர் மாத...
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்; இலங்க்கைக்கு கிடைத்த இடம்!
அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. '2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்' அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்தில...
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, இதனைக் குறிப்பிட்டார்....
சொகுசு காரில் வந்து தம்பதிகள் கைவரிசை: சினிமாவை மிஞ்சிய சம்பவம்
அங்குருவாத்தோட்ட பிரதேசத்தில் சொகுசு காரில் வாடிக்கையாளர்கள் போல் வந்து மளிகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை அங்குருவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அங்குருவாத்தோட்ட காவல் பிரிவுக்கு உட்பட்ட மளிகைக் கடை ஒன்றில் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி காணாமல் போய...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி; துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான வழக்கு 2027 இல்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடமைப்புத் தொகுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் த...
நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!
சிலாபம் பகுதியில், நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர் ஒருவர், போதைப்பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சில மருந்து மாத்திரைகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிலாபம் பகுதிக்கு அருகிலுள்ள பிராந்திய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ...
மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம்
உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காய்கறி பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தையின் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்...
கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான...