இலங்கை
கொழும்பில் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்பாகப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான...
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்
சீரற்ற காலநிலையை அடுத்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய...
விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம்
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்படவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரமானது, டெங்கு தொற்று நோய் ஏற்...
காலி மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து
காலி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (08) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ ...
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள வ...
தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம்
அம்பாறை புறநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை புறநகர் பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 6ஆம் திகதி இரவு, உயிரிழந்தவர் தனது சகோதரருடன...
கொழும்பில் சொத்து விலைகள் உச்சம் ; நிதி ஆபத்து எச்சரிக்கை
கொழும்பில் காணிகள், வீடுகள் மற்றும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலைகள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் உண்மையான வருமானத்தையும் மீறி சொத்துக்களின் விலைகள் அதிகரித்துள்ளமை, நாட்டின் நிதி அமைப்புக்கு கடுமையான ஆபத்தை ...
அமெரிக்காவின் MV-22B ஒஸ்ப்ரே வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான MV-22B ரக ஒஸ்ப்ரே விமானம் இன்று (07) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தியை, உலங்கு வானூர்தி போன்று செங்குத்தாக மேலெழும்பவும், சாதாரண விமானத்தையைப் போன்று வேகமாகப் பறக்கவும் பயன்படுத்த முடிய...
கொழும்பு வெள்ளப் பெருக்கு ; விசேட குழு அமைக்க உத்தரவு
கொழும்பு நகரில் ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை வினைத்திறனாகவும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்காக, கொழும்பு மாநகர சபையின் வழிகாட்டலில் முப்படையினர், பொலிஸார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட செயற்பாட்டுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உத்...
வவுனியாவில் சுகாதாரமற்ற முறையில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டு...
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டம் (நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகள்) கண்டி மா...
பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் ; அதிர்ச்சிகரமான சம்பவம்!
தோட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களைக் கட்டிப்போட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ராகம, குருகுலாவ பகுதியில் பதிவாகியுள்ளது. குருகுலாவ கோயில் வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிலேயே இந்த சம்பவம் அரங்க்கேரியுள்ளது. சம...
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Department of Irrigation) தெரிவித்துள்ளது. இதற்கமைய, தற்போது நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்த்தேக்கத்துக்கு கிடைக...
தீபாவளியை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாளை (08) வடக்கு மாகாணம், முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலும் மஹியங்கனை, ரிதீமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர்ந்த பதுளை மாவட்டத்தின் ஏனைய அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படு...