வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

23 November 2026 4 நாள்
காலி பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம், கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

பெந்தோட்டை இரண்டாம் இலக்க உயிர்காப்பு நிலையத்துக்கு இடதுபுறமாக சுமார் 500 மீற்றர் தொலைவிலும், கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலும் ஐந்து இளைஞர்கள் இன்று (22) கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

நீராடிக்கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கியதை அவதானித்த கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் அவர்களில் நான்கு இளைஞர்கள் பாதுகாப்பாகக் கரைக்கு மீட்டு வரப்பட்ட போதிலும், 16 வயதுடைய மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஏனைய நான்கு இளைஞர்களும் 15, 16, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காகப் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு