வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

27 November 2026 4 மணி

சீரற்ற காலநிலையால் பெய்யும் மழையுடனான காலநிலைக் காரணமாக ஆறு மாவட்டங்களின் 29 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (27) பிற்பகல் 04.00 மணி வரை அமுலில் இருக்கும். களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் தும்பனே, ஹதரலியத்த, உடபலாத, கங்க இஹல கோரளை, உடதும்பர, தொழுவ மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறும், உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெஹியோவிட்ட மற்றும் ருவான்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறும், கேகாலை, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு, நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, நோர்வூட், அம்பகமுவ கோரளை, தலவாக்கலை மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அதே கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு