சமூகச் செய்திகள்
மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இலங்கையின்...
யாழில் தந்தை, மகனை பலியெடுத்த விபத்து ; வடமாகாண ஆளுநரின் அதிரடி தீர்மானம்
சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான ஆள்மாறாட்டம் மற்றும் பொலிஸாருடனான தொடர்புகள் குறித்த தகவல்களையும் வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் எனக் கு...
தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை
அம்பாறை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் துறவறம் பூண்டிருந்த சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக, பௌத்த தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (17) உறுதி செய்தது. இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், அம்பாறை மேல...
நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து
கிரிஸ் வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந...
10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உண்டான கர்ப்பம் எதிர்பாராத விதமாகக் கலைந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத விதமாக வயிற்றில் இருந்த கரு கலைந்தத...
ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்ட...
பொலிஸாரைக் கண்டதும் இப்படியா! யாழில் வீட்டிற்குள் இளைஞர் அரங்கேற்றிய செயலால் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், குறித்த நபர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் ...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (Passport) ஒன்றைச் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியது. குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அ...
அனுராதபுர மோதல் ; இராஜங்கனே சத்தாரதன தேரர் கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்க...
புலிகளின் தலைவரின் இல்லக் காணியில் மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாத நபர்களால் கிழிப்பு
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியின் மதிலில் பொருத்தப்பட்டிருந்த பதாகை, இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது. குறித்த பதாகையில், “தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் சிறு வயதில் வசித்த வீடு” எனக் குறிப்பிடப...
யாழ். சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட கைதி ; வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கடந்த 09ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் ...
அனுராதபுர பெண் மருந்துவர் பாலியல் துஸ்பிரயோகம்; நீதிமன்றில் தந்தை கண்ணீர்
அனுராதபுர வைத்தியசாலை விடுதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மருத்துவரின் தந்தை நீதிமன்றத்தில் , கண்ணீருடன் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சாட்சியமளித்துள்ளார். அனுராதபுரம் வைத்தியசாலை தங்குமிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே மகளின் சம்பவத்திற்குக் காரணம் என நிர்வாகத்தின் மீது...
அஸ்வெசும மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகளுக்கான மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கியின் நிதி வசதிகளின் கீழ் அஸ்வெ...
காதலிக்காக தனிஷ்க் நகைக்கடை கொள்ளை; பொறிவைத்து தூக்கிய பொலிஸார்!
தமிழகத்தில் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்கிற வாலிபர் தனது பெண் தோழி மற்றும் யுடியூபர் மீனாட்சி என்பவருக்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மீனாட்சி மற்றும் நகைகளை பதுக்க நிஷாந்...
ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு
ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் . ஆனந்த பாலிதவை, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ப...