இலங்கை
கொள்கலன் கையாளுதலில் 10 சதவீத வளர்ச்சி ; சர்வதேச தரவரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம்
சர்வதேச கொள்கலன் துறைமுகங்களுக்கான அல்பாலைனர் (Alphaliner) தரவரிசையில் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறி கொழும்பு துறைமுகம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்...
காற்று மாசு தீவிரம் ; சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவைகள் ரத்து
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19) இரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் போதிய பார்வைத் தெளிவ...
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் திடீர் மாற்றம்
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, நாளை (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் மாத்திரம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்ற...
பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ...
இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்
கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பில் சென்னையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்தது. நடப்பு ஆண்டில் இந்தியாவ...
மொரிஷியஸ் குடியரசில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு!
மொரிஷியஸ் குடியரசில் தொழில் வாய்ப்புகளுக்காக 5இ000 இலங்கை பிரஜைகளை அனுப்புவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் (Sri Lanka Mauritius Friendship Association) இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது. இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் என்ற ரீதியில் வருடத்திற்குக் குறைந...
இன்புளுவென்சா தொற்று; மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
தற்பொழுது நாட்டில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விசேட கவனம...
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்; முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்; மேலதிக தகவல்
கடவத்த (Kadawatha) நகரில் இன்று (19) காலை, உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடவத்த சந்திப்பில் அமைந்துள்ள இருமாடி கட்டிடத்தில் இயங்கி வந்த மின்சாதனக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு சிறு பிள்ள...
யாழ் செம்மணி மனிதப்புதைகுழி அடுத்த கட்டம்
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் வழங்கிய உத்தரவுகள், பேராசிரியர் ராஜ்...
விடுதலை புலிகளின் தலைவர் இல்லம் சென்ற திருமா; பாஜக கண்டனம், காங்கிரஸ் பாராமுகம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த இடத்துக்கு, தொல். திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் ...
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி!
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரொட்டும்பே அமில நாளை (20) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார். இதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று தற்போது ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற கொலைகள், கப்பம் கோரல்கள் மற்...
மீண்டும் விளக்கமறியலில்; நாமலுக்காக நீதிமன்றம் வந்த மனைவி லிமினி
கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை விமான சேவைக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த ஒப்பந்தத்தில் இடம்பெற்...
2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்...
தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் 35 வயதுடைய பெண்ணொருவர் தவறுதலான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந...
விவாகரத்து வழக்குக்குச் சென்ற தம்பதியரிடையே நீதிமன்ற வளாகத்தில் மோதல்
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காகச் சென்று திரும்பிய கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் அமைந்துள்ள நீ...