இலங்கை
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11) கொழும்பு மேலதிக நீதவான் முன்...
தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து
மருதமுனை – நீலாவனை பகுதியில் நேற்று இரவு அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து மருதமுனை நீலாவனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசால...
உதைபந்தாட்ட போட்டி ; வரலாற்றுச் சாதனை படைத்த யூனியன் கல்லூரி
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய சம்பியன் பட்டத்தைத் தனதா...
மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர்
இலங்கை கடற்படையினர், மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய மூன்று நபர்களையும், ஒரு டிங்கி படகையும் நேற்று (11) கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துள்ளனர். கடற்கரைச் சூழல் தொகுதியின் உயிரியல் பன்முகத்தன்மைய...
முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்
தேசிய லொத்தர் சபை (NLB), 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் லொத்தர் விற்பனை மூலம் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் லொத்தர் விற்பனை மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 6000 கோடி ரூபாயைத் தாண்டும் என அந்தச் சபை எதிர்பார்க்கிறது. ...
ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உனவட்டுன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். குறித்த பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உனவட்டுனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந...
தமிழர் பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் பறிபோன உயிர்
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தின் 14ஆம் கிராமமான கனேசபுரம் விலினையடிச் சந்தியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (10) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்வி...
சக ஊழியரின் உயிரை பறித்த நபர் கைது ; இரவில் அரங்கேறிய சம்பவம்
ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (10) இரவு நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் அப்பகுதியிலுள்ள தென்னந்தும்பு உற்பத்தி ஆலையொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணிபுரிந்த மற்றொரு ஊழியருடன் ஏற்பட்ட தகராறு ம...
சுற்றுலா விசாவில் வௌிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
சுற்றுலா விசா (Visit Visa) மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
பதுளை - பண்டாரவளை பிரதான வீதி மீண்டும் வாகன போக்குவரத்துக்காக சற்றுமுன்னர் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல - உடுவரை 6 ஆம் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இந்த வீதியில் இன்று (11) மாலை போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் வீதி அபி...
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 1 ஆம் திகதி மு...
வழக்கிலிருந்து விடுதலையான அனோஜன் ; நாடு திரும்புவது குறித்து வெளியான முக்கிய தகவல்
மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் கைவிடத் தீர்மானித்துள்ளதாகவும், ...
2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு
2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் பரிசீலித்தார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் இதன்போது இணைந்துகொண்டார். டித்வா அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கு நெரு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இதன்போது, அவர...
ஜப்பானில் பிரசவத்தின்போது இலங்கைப் பெண் உயிரிழப்பு!
ஜப்பானில் வசித்து வந்த இலங்கைப் பெண்ணும், சமூக வலைத்தளங்களில் 'Naomichan' எனப் பிரபலமாக அறியப்பட்டவருமான 33 வயதுடைய ஆஷா நயோமி வீரவர்தன (Asha Nayomi Weerawardhana) பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானியக் கணவர் 'Keichan' உடன் குடும்ப வாழ்க்க...