இலங்கை
அவிசாவளையில் கொட்டித்தீர்த்த கனமழை ; பேருந்து நிலையத்தைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளம்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி அவிசாவளைப் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அவிசாவளைப் பகுதியில் 110.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, இன்று (08) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக அவிசாவளை – புவக்பிட்டிய நக...
நாடளாவிய ரீதியில் நாளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தமது பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை அவற்றுக்குத் தீர்வு காண்பதற...
எரிபொருள் மீதான வரி அதிகரிப்பு - மக்களுக்கு மேலும் சுமை ; அரசாங்கத்தை சாடும் நாமல்
எரிபொருள் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் இறுதிச் சுமையைப் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்...
சிங்கப்பூரிலிருந்து நளின் பண்டார அனுமதியின்றி கொண்டு வந்த 39 ட்ரோன்கள் பறிமுதல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, உரிய அனுமதிகளைப் பெறாமல் நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படும் 39 ட்ரோன்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்ட...
வனப்பகுதியில் காட்டு யானையை துன்புறுத்திய 7 மாணவர்களுக்கு நேர்ந்த கதி
யஹன்கல வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைக்கு மாணவர் ஒருவரினால் கல்வீச்சு மேற்கொள்ளும் விதத்திலான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளி மற்றும் சம்பவம் தொடர்பில், 119 காவல்துறை அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்ட உடுதும்பர பொலிஸார், ய...
யாழில் இளைஞனை தாக்கிய போதை ஆசாமிக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்க போதை ஆசாமி ஒருவர், இளைஞன் மீது தாக்குதல் நடாத்தி, ஒரு தொகை பணத்தை அபகரித்தமை தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் , தாக்குதலாளியான போதை ஆசாமியை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில...
மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் ; வாகனங்களுக்குப் பலத்த சேதம்
இன்று (8) மாலை பெய்த மழையுடன் வீசிய பலத்த காற்றினால் நவகமுவில் உள்ள தேவாலயம் ஒன்றின் பின்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 4 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடை...
கொழும்பில் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்பாகப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான...
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்
சீரற்ற காலநிலையை அடுத்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய...
விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம்
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்படவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரமானது, டெங்கு தொற்று நோய் ஏற்...
காலி மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து
காலி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (08) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ ...
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள வ...
தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம்
அம்பாறை புறநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை புறநகர் பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 6ஆம் திகதி இரவு, உயிரிழந்தவர் தனது சகோதரருடன...
கொழும்பில் சொத்து விலைகள் உச்சம் ; நிதி ஆபத்து எச்சரிக்கை
கொழும்பில் காணிகள், வீடுகள் மற்றும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலைகள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் உண்மையான வருமானத்தையும் மீறி சொத்துக்களின் விலைகள் அதிகரித்துள்ளமை, நாட்டின் நிதி அமைப்புக்கு கடுமையான ஆபத்தை ...
அமெரிக்காவின் MV-22B ஒஸ்ப்ரே வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான MV-22B ரக ஒஸ்ப்ரே விமானம் இன்று (07) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தியை, உலங்கு வானூர்தி போன்று செங்குத்தாக மேலெழும்பவும், சாதாரண விமானத்தையைப் போன்று வேகமாகப் பறக்கவும் பயன்படுத்த முடிய...