சமூகச் செய்திகள்
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ACMC மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆர்ப்பாட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட அமைப்பாளரும் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினருமான அன்பாஸ், ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (20) செவ்வாய்க்கிழமை பொல்கஹவெலயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். பிக்குமாருக்கு ஆதரவாகவும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் விகாரமா...
தமிழர் பகுதியில் இடி, மின்னல் தாக்கம் ; 10இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கம் காரணமாக 10இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில், புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர...
நாமலின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவைப் பிணையில் விடுவிக்கக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரைத் தலா 10 இலட்சம் ரூபா பெற...
தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் தண்டனையா? அமைச்சர் விளக்கம்
நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்த...
யாழில் கசிப்பு ஆராய்ச்சி செய்த ஆணும் பெண்ணும் கைது
யாழ்ப்பாணம் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந...
திருகோணமலையில் இரு பெண்கள் படுகொலை ; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது
திருகோணமலை, பாலைஊத்து பகுதியில் வைத்து இரண்டு பெண்களைக் கடத்திச் சென்று, கடற்படை முகாமின் நிலத்தடிப் பதுங்கு குழியில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்து படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ...
வர்த்தகரை கொலை செய்யத் திட்டமிட்டவர் துப்பாக்கியுடன் கைது
களுத்துறை அங்குருவாதொட்டை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், டி-56 ரக துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'வெல்லே சாரங்க' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் குறித...
11 வயது மாணவன் மீது தாக்குதல் ; அதிபருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு
களுத்துறை பண்டாரகம, வெல்மில்ல ஸ்ரீ சாராலங்கார பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயது மாணவன் மீது, பாடசாலையின் அதிபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்டாரகம காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவன் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதிபர் அவரது முகத்தின் இருபுறமும்...
சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் ; கஸ்ஸப தேரர் விவகாரத்தில் பொலிஸ் எச்சரிக்கை
பலாங்கொட கஸ்ஸப தேரர், கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் வழுக்கி விழுந்ததன் காரணமாகவே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, குறிப்பாக சமூக ஊடகங்களில் சிலர் பொதுமக்களை தூண்டும் வகையில் பொய்யான த...
அக்போ யானையை தேடும் பணி தொடர்கிறது
'அக்போ யானையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யானையைக் கண்டறிவதற்காக இன்றைய தினத்தில் (18) இராணுவத்தினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த அமைச்சு கு...
காவன்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது
'காவன்திஸ்ஸ' என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் பணியாற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகா...
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைது
இலங்கையில் இறக்குமதி செய்ய அல்லது பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட அதிக எஞ்சின் கொள்ளளவு (சி.சி) கொண்ட 5 அதிவேக மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள், சான்றிதழ்கள் மற்றும் இலக்கத்தகடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடி...
6 கோடி ரூபா ‘அஸ்வெசும’ நிதி மோசடி ; CID விசாரணைக்கு நடவடிக்கை
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள 'அஸ்வெசும' நலன்புரி திட்ட நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குழுவொன்று குறித்து, பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும்...
கடந்த மாதம் திருமணம் ; ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயக்குநர்
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே ...
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலிக்கு காதலன் நிகழ்த்திய கொடூரம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்
இந்தியாவின் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி உடல் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர...