இலங்கை
இலங்கையில் காற்றின் தரம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 200 என்ற அளவை நெருங்கியிருந்த காற்றின் தரச்சுட்டெண், இன்று 50 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது....
கொழும்பு துறைமுக நகரில் தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு
தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது ...
5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி எச்சரிக்கை!
காணிகள், சொத்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு மாறாகப் பணமாகச் செலுத்தினால், அதிக வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவ...
பாடசாலை மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; SIக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறை
பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர...
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்...
இந்தோனேசியாவில் 15 ஆண்டுகளாக தவிக்கும் ஈழ அகதிகள்! உருக்கமான கோரிக்கை
இலங்கையின் உள்நாட்டு இறுதிப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, கடந்த 15 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தங்களையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளதாக சர்...
இலங்கை பெண்ணுக்கு ஐக்கிய இராச்சியத்தில் கிடைத்த கௌரவ பதவி
சமுத்திர உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் கடல் பற்றிய பொதுமக்களின் புரிதலை விரிவுபடுத்துவதற்காக செய்த சேவையைப் பாராட்டி இலங்கையின் சமுத்திர உயிர்ப்பல்வகைமை கலாநிதி ஆஷா டி வொஸிற்கு ஐக்கிய இராச்சியத்தின் சமுத்திர உயிரியல் சங்கத்தினால் The Marine Biological Association பதவி வழங்கப்பட்டுள்ளது. வட இந...
பல நகைக்கடைகளில் திருட்டு; ஆறு மொழிகளில் பேசும் சந்தேகநபர்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிஸார்!
கொழும்பு கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்குச் சென்று, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய சந்தேகநபர், நேற்று (23) கொழும்பு க...
இலங்கை – பிரித்தானிய சுங்கத்துறைக்கு இடையில் அபிவிருத்தி ஒப்பந்தம்
இலங்கை சுங்கத்திற்கும் பிரித்தானியாவின் உள்நாட்டு அரசிறை வருவாய் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கும் இடையில் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக வசதிப்படுத்தல் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில...
கழிவறைக்குச் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு
அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் – மொரகஹப்பள்ளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த பெண் கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது, வீட...
விகாரையில் மணி அடிக்கும் நாய்; இலங்கையில் பலரையும் வியக்க வைத்த ஐந்தறிவு ஜீவன்!
கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் செல்வ சந்திதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிகாமத்திற்கு பாத யாத்திரை சென்ற சுப்பிரமணியன் எனும் நாய் மக்கள் மத்தியிலும் சமூகவலைத்தளங்களிலும் பிரசித்தி பெற்றது. இந் நிலையில் தற்போது ஹெம்மாத்தகம, மெதிலிய பண்டைய விகாரையில் வசிக்கும் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க 'நாய் இலங்கை...
யாழில் ரௌடிகள் அட்டகாசம்; வீடொன்றில் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்திய 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டில் இருந்த தாய் , தந்தை , மகன் மற்றும் மகள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நாடத்தி விட்டு தப்பி சென்றனர். தாக...
இலங்கை சிறைச்சாலைகளில் பரவும் நோய் ; கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்குத் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 1,500 கைதிகளுக்குத் தடுப்பூசி...
இலங்கைக்கு வந்த இந்திய பிரஜைக்கு நேர்ந்த கதி
கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார் தெரிவித்தனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில ...
நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்
நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாக சிறையில் அடைத்தால் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழர்களும் மகிழ்வார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாவிடின் அவரது மனைவி அரசியலுக்கு வருவார். ஆட்சி மாற்றம் ஏற்படும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தி...