இலங்கை
துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 2,000 மெட்ரிக் தொன் சோளம் ; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்
திரிபோஷா உற்பத்திக்காக கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான...
நடுக்கடலில் செயலிழந்த வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு
நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த 'எம்.வி. ஏ.ஏ.எல் ஜிப்ரால்டர்' (MV AAL Gibraltar) என்ற சரக்குக் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்தமையால...
16 வயதுடைய சிறுவனின் உயிரை பறித்த கார் சாரதி ; தீவிரமாகும் விசாரணை
கொஹுவலை எஸ். டி எஸ். ஜயசிங்க மாவத்தையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் தரிப்பிடத்தில் மோதிய விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, நுகேகொடையிலிருந்து கொஹுவலை நோக்கிப் பயணித்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மற்றொரு காரின் பின...
மயானத்திற்கு அருகில் அரங்கேறிய சம்பவம் ; வசமாக பிடிபட்ட இளைஞன்
கம்பஹா - நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபெஹர மயானத்திற்கு அருகில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 103 கிராம் 250 மில்லி கிராம் ஹெ...
இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகினாகல பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அந்தக் காணிக்குள் நுழைய முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். க...
ஹெல்மெட் அணியாமல் சென்றவரால் சோதனையில் காத்திருந்த ஷாக்
புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இருவர், 43 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, முல்லிபுரம் பகுதியில் ஹெல்...
இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழப்பு
இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் (ETA) வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினித் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இ...
இலங்கையில் காற்றின் தரம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 200 என்ற அளவை நெருங்கியிருந்த காற்றின் தரச்சுட்டெண், இன்று 50 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது....
கொழும்பு துறைமுக நகரில் தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு
தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது ...
5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி எச்சரிக்கை!
காணிகள், சொத்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு மாறாகப் பணமாகச் செலுத்தினால், அதிக வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவ...
பாடசாலை மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; SIக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறை
பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர...
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்...
இந்தோனேசியாவில் 15 ஆண்டுகளாக தவிக்கும் ஈழ அகதிகள்! உருக்கமான கோரிக்கை
இலங்கையின் உள்நாட்டு இறுதிப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, கடந்த 15 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தங்களையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளதாக சர்...
இலங்கை பெண்ணுக்கு ஐக்கிய இராச்சியத்தில் கிடைத்த கௌரவ பதவி
சமுத்திர உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் கடல் பற்றிய பொதுமக்களின் புரிதலை விரிவுபடுத்துவதற்காக செய்த சேவையைப் பாராட்டி இலங்கையின் சமுத்திர உயிர்ப்பல்வகைமை கலாநிதி ஆஷா டி வொஸிற்கு ஐக்கிய இராச்சியத்தின் சமுத்திர உயிரியல் சங்கத்தினால் The Marine Biological Association பதவி வழங்கப்பட்டுள்ளது. வட இந...
பல நகைக்கடைகளில் திருட்டு; ஆறு மொழிகளில் பேசும் சந்தேகநபர்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிஸார்!
கொழும்பு கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்குச் சென்று, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய சந்தேகநபர், நேற்று (23) கொழும்பு க...