யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவரைத் தனியார் முன்பள்ளி ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள தனியார் முன்பள்ளி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளியின் ஆசிரியர் சிறுமியை கடுமையாகத் தாக்கியதில் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ்...
11 November 2026
யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை
யாழில் குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
யாழில் திடீர் பணக்காரர்களாகிய சுமார் 18 பேர் ஏற்கனவே பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக சொத்துக்கள் , போதைப் கடத்தல்கள் , மீட்டர் வட்டி , கப்பம்...
10 November 2026
இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நைனமடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ திசையிலிருந்து தோப்பு திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வலது பக்கமாகத் திரும்ப முற்பட்டபோது, பின்ன...
10 November 2026
250 பேருக்கு கூட்டுத்திருமணம் ; குலுக்கல் முறையின் தேர்வான இளம் ஜோடிகள்
இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் - யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல தசாப்த கால போர் பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பு அம்சமாகும்.
இந்தக் கூட்டுத் திருமணத்துக்காக 11,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடை...
10 November 2026
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அதன்படி, அந்த மாவட்டத்தில் இதுவரை 22,502 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 20,799 நோயாளர்கள் அடையா...
10 November 2026
இரு இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்
ராகம பகுதியில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 2 கிலோகிராம் 14 கிராம் 'ஐஸ்' போதைப்...
10 November 2026
பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு ; தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரிக்கை
கட்டுமானப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்புகள் கட்டுமானத்துறையை முடக்கத்தை நோக்கித் தள்ளக்கூடும் என்று தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்புன் அபேசேகர, தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் சிமெந்து பைக்கெட் ஒன்றின் விலை சுமார் 300 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னர் சுமார் 1,900 ரூபாவுக்கு வ...
10 November 2026
படகில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட 8 ஆடுகள் மீட்பு ; வசமாக பிடிபட்ட இருவர்
புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற எட்டு ஆடுகளுடன் டிங்கி படகொன்றையும், அதில் பயணித்த இரண்டு சந்தேகநபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை இன்று (09) திங்கட்கிமை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இடம்பெற்றுள்ளது...
10 November 2026
கால்வாயில் விழுந்த மோட்டார் சைக்கிள் ; 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
வாரியப்பொல பாதெனிய – புத்தளம் வீதியின் செனரத் கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மோட்டார் சைக்கிள் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள...
10 November 2026
ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக தேரர்களின் போராட்டத்தில் பதற்றம்
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தனி நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை உருவானது.
புனித பூமியொன்றிற்குள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது பௌத்த சாசனத்துக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி, குறித்த நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களைக் கடுமையாகச் சாடியதை தொடர்ந்தே இந்த முரண்பாட்டு நிலைமை எழுந்துள...
10 November 2026
சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய வெளிநாட்டவர்; பெரும் சர்ச்சை
இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரை படகிலிருந்து கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படகில் அமர்ந்து தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, சுற்றுலாப் பயணி ஒருவர் அவரைத் திடீரென கடலுக்குள் தள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.
கடலில் விழுந்த வழிகாட்டியை...
10 November 2026
காரின் மீது முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு
ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்த காரொன்று சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து, ஹைலெவல் வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினு...
10 November 2026
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சேவைபெறுநர்கள், முன்பதிவு (Prior Appointment) செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகனங்களைப் புதிதாக...
10 November 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளப்பபெருக்கு எச்சரிக்கை
கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமை பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (9) இரவு 7:45 அளவில் வெளியிட்ட விசேட அறிவித்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தெனியாய, தெல்லவ, தவலம, ...
10 November 2026
1.9 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,912,233 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் நவம்பர் 01 முதல் நவ...
10 November 2026
யுவதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு; தமிழர் பகுதியில் தொடரும் பயங்கரம்
கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாகச் ச...
10 November 2026
யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாண பணிகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வோம் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்றையதினம்(08) மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன்...
10 November 2026
சீன பெண் உடன் ரகசிய உறவை ஒப்புக்கொண்ட என்விடியா CEO! உலகளவில் பேசுபொருளான விவகாரம்
சீன பெண் உளவாளியாக சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹூவாங்குடன் தொடர்பில் இருந்ததை, ஜென்சன் ஹூவாங் ஒப்புக் கொண்டுள்ளார்.
மனைவி, குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், நிறுவனத்தின் ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு செய்யத் தவறிய கடமைகளுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக என்விடியா நிறுவனம் விசாரணை நடத்தவுள்ள நிலையில் இந்த விவகாரம் இப்போது பேசுபொருளாகி உள்ளது. அமெரிக்க சிப் தயா...
10 November 2026
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை,...
10 November 2026
யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாமனாயக்கவிடம் இருந்து தேசிய உற்பத்தித்திறன் விருது முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது.
விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 08.11.2...
10 November 2026
தீபாவளி பட்டாசால் விபரீதம் ; கருகிய குடிசைகள் மற்றும் கடைகள்
மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஹாஜி கசம் சால் (Haji Kasam Chawl) பகுதியில் நள்ளிரவில் ராக்கெட் பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 40 முதல் 50 குடிசைகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி கோண்டாட்டங்க்கள் இடம்பெற்றது. இதன்போது மக்கள் பெருமளவு பாடாசுகளை கொழுத்தி தீபாவளியை கொண்டாடினர்.
இன்னிலையில் மும்பை டோங்ரி ப...