சனி, 17 அக்டோபர், 2026
அதிவேக செய்திகள்
மனைவியின் பதின்மவயது சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி | உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை! | கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள் | யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்! | முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை | மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் | யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர் | போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில் | ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை | 1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம் |

உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!

17 October 2026 9 மணி

‘காவந்திஸ்ஸ’ எனப் பிரதேச மக்களால் அழைக்கப்படும் பாரிய யானை திடீரென நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணிநேர தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைச்சரினதும் பிரதி அமைச்சரினதும் நேரடி அறிவுறுத்தல் மற்றும் முழுமையான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட நடவடிக்கைக்கு முப்படையினரும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

யானைக்குத் தேவையான தொடர்ச்சியான மருந்து வழங்கல், அதன் உடல் நிலையைச் சீராகப் பேணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அவசர நிலை ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் முன்கூட்டியே தயார்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, யானையை அவசரமாகத் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கான விசேட பட்டைகள் உள்ளிட்ட தேவையான வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முன்னணி விலங்கு மருத்துவ நிபுணர்கள் இணைந்து தயாரித்த அறிவியல் அடிப்படையிலான சிகிச்சைத் திட்டத்தின் கீழ், காவந்திஸ்ஸ யானைக்கான சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்கள், தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் அனுபவமிக்க கால்நடை மருத்துவர்கள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பீடத்தின் பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் இணைந்து இந்தச் சிகிச்சைத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர்.

மேலும், உள்ளூர் நிபுணர்களின் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில், வெளிநாட்டு கால்நடை மருத்துவ நிபுணர்களின் உதவியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு