சனி, 17 அக்டோபர், 2026
அதிவேக செய்திகள்
மனைவியின் பதின்மவயது சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி | உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை! | கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள் | யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்! | முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை | மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் | யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர் | போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில் | ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை | 1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம் |

யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்

17 October 2026 11 மணி

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு, இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) நேற்று (15) விஜயம் செய்தார்.

இதன்போது , யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர்பில் பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின்போது, யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்று மரபுகள், அதன் தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் அது வகிக்கும் பங்கு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

போர்த்துக்கேயர்களால் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர்களால் விரிவுபடுத்தப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை, வடமாகாணத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

யாழ்ப்பாண் கோட்டையானது, யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இலங்கைக்கான கியூபா தூதுவருடன் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு