சனி, 17 அக்டோபர், 2026
அதிவேக செய்திகள்
மனைவியின் பதின்மவயது சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி | உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை! | கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள் | யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்! | முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை | மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் | யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர் | போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில் | ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை | 1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம் |

மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்

17 October 2026 11 மணி

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழைக்குள்ளும் 26ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் 26ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடுமையான மழை பொழிந்த போதிலும் மழைக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு