சனி, 17 அக்டோபர், 2026
அதிவேக செய்திகள்
மனைவியின் பதின்மவயது சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி | உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை! | கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள் | யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்! | முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை | மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் | யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர் | போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில் | ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை | 1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம் |

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை

17 October 2026 11 மணி

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபா பணம் சட்டவிரோதமான முறையில் ‘சிரிலிய சவிய’ அமைப்பிற்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு