வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் | கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் |

யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

23 November 2026 3 நாள்

வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு பரவும் சூழலினை பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 27 ஆதன உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

வடமராட்சி பிரதேசத்திற்குபட்ட துன்னாலை, அல்வாய் மற்றும் உடுப்பிட்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு களத்தரிசிப்பின் போது வீட்டு சூழலில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகும் சூழலினை பேணியமை கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் துன்னாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 08 குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும், அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும், உடுப்பிட்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 04 குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 27 ஆதன உரிமையாளர்களும் மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தலா பத்தாயிரம் ரூபா வீதம் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா தண்டப்பணம் மன்றினால் விதிக்கப்பட்டது.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு