வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் | கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் |

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

24 November 2026 2 நாள்

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

அதன்படி, குறித்த எச்சரிக்கையானது இன்று (23) பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு