வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் |

நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

26 November 2026 24 நிமிடம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று (25) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (26) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

நிலை 02

கண்டி மாவட்டம்: உடுநுவர

கேகாலை மாவட்டம்: கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ.

நிலை 01 - Yellow Alert

நுவரெலியா மாவட்டம்: நில்ந்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, கொத்மலை கிழக்கு, தலவாக்கலை, நோர்வூட் மற்றும் வலப்பனை.

கண்டி மாவட்டம்: தொலுவ, கங்க இஹல கோரளை, உடபளாத மற்றும் யட்டிநுவர

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவான்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட

களுத்துறை மாவட்டம்: புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர

இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல மற்றும் குருவிட்ட

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மலைச்சரிவுகளை அண்டி வசிக்கும் மக்கள், மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அபாயங்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு