சைபர் தாக்குதலுக்கு உள்ளான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், இணையவழியில் சேவைகளுக்கான நேரத்தை முன்பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய சேவைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.