சமூகச் செய்திகள்
இலங்கைக்கு வந்த இந்திய பிரஜைக்கு நேர்ந்த கதி
கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார் தெரிவித்தனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில ...
பொரளை அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து
பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது உள்ளே சிக்கியிருந்த வெளி...
பல்கலைக்கழக மின்தூக்கியில் 14 மணிநேரம் சிக்கி தவித்த மாணவி!
இந்தியா மகாராஷ்டிர மாநிலம் புனேவின் லோனி கல்போர் (Loni Kalbhor) பகுதியில் உள்ள எம்ஐடி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (MIT-ADT University) வளாக மின்தூக்கியில் (lift) சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த மாணவி மறுநாள் காலை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்...
சொகுசு காரில் வந்து தம்பதிகள் கைவரிசை: சினிமாவை மிஞ்சிய சம்பவம்
அங்குருவாத்தோட்ட பிரதேசத்தில் சொகுசு காரில் வாடிக்கையாளர்கள் போல் வந்து மளிகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை அங்குருவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அங்குருவாத்தோட்ட காவல் பிரிவுக்கு உட்பட்ட மளிகைக் கடை ஒன்றில் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி காணாமல் போய...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி; துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான வழக்கு 2027 இல்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடமைப்புத் தொகுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் த...
ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது!
இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட, ஜிம்பாப்வேயின் முக்கிய மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், பாலியல் வன்கொடுமை மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயின் முக்கிய மத போதகரும், 'ஸ்பிரிட் எம்பஸி' (Spirit Embassy) நிறுவனருமான யூபர...
நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!
சிலாபம் பகுதியில், நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர் ஒருவர், போதைப்பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சில மருந்து மாத்திரைகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிலாபம் பகுதிக்கு அருகிலுள்ள பிராந்திய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ...
கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான...
அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும்
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் என்ற இளைஞரை விடுதலை செய்தது போன்று பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் தனது இடத்தை ஞானசார தேர்தலையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். ...
சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை!
இந்தியா ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வில், வரதட்சணையாக ரூ.13 லட்சம் மதிப்பிலான மாருதி பிரெஸ்ஸா கார் கிடைக்காததால் டெல்லி காவல்துறையில் பணிபுரியும் மணமகன் குல்தீப் திருமணத்தை நிறுத்திவிட்டு திரும்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தை மீளமைக்க மேலும் 3 நாட்கள்!
இணையவழி சைபர் தாக்குதலுக்கு உள்ளான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முழுமையாக மீளமைக்க மேலும் மூன்று நாட்கள் தேவைப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சைபர் தாக்குதல்...
மதுகுடிக்க வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்; தோழி உள்பட 4 பேர் செய்த கொடூரம்
தானேயில் மதுகுடிக்க வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொலிசார், தோழி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், காஷிகாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சம்பவத்தன்று அவரது தோழி விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தார். இதையடுத்து சிறுமி, சீத்தலுடன் ...
திருகோணமலையில் ரயிலில் மோதி இருவர் பலி
திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இந்த மூன்று நபர்களும் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக...
பாதசாரிகள் கடவையில் அட்டகாசம்; பாதசாரியை தாக்கிய சாரதி கஞ்சா பாவனையாளர் என மருத்துவ அறிக்கையில் உறுதி
கொழும்பு, பொரளை – கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி, பாதசாரிகள் கடவையை மறித்து, பாதசாரி ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சாரதி கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர் என்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் ப...
அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப் போவதாகப் பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாம் எதிர்பார்த்த நிவாரணங்கள் வழங்கப்படவில்...